Sunday, December 4, 2022

கரூரில் தீபாவளி அன்று வெளிவந்த 6 அடி உயர சிவலிங்கம்

🕉️ கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கொடையூர் கிராமம் அரசம் பாளையம் கிராமத்தில் தீபாவளி அன்று வெளிப்பட்ட 6 அடி உயர சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.  🕉️


அமராவதி ஆரும், குடகனாரும் ஒன்று சேரும் அரசம்பாளையம் கிராமத்தில் ஆற்றின் கரையில் கந்தசாமி என்பவரின் விவசாய நிலத்தில் 
4 தலைமுறையாக வழிபாடு இன்றி ஒரு நந்தி இருந்துள்ளது. இதன் கிழக்கே 15 அடி தூரத்தில் கோவில்களின் எஞ்சிய பகுதியில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும் தெரிந்தது. இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற்று தீபாவளி அன்று எடுத்து வைக்கப்பட்டது. முழு விவரங்கள் விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 


 
செல்லும் வழி :

கரூர் to திண்டுக்கல் 4 வழிச் சாலையில் அரவக் மலைக் கோவிலூர் அருகே ஐந்து ரோடு & சீத்தைப்பட்டி பேருந்து நிறுத்ததில் இருந்து மேற்கே 2.5 கி.மீ தூரத்தில் அரசம்பாளையம் கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது.

தொடர்ந்து பயணிப்போம்
சிவாலயங்களை நோக்கி...

சிவசங்கர்
திண்டுக்கல்
8667598045 - Mobile Number 
9976913310 - Whatsapp Number



வழி :
பெங்களூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மற்றும் சென்னை, விழுப்புரம், திருச்சியில் இருந்து வருபவர்கள் கரூர் வழியாக வர வேண்டும். 


கரூர் to திண்டுக்கல் 4 வழிச் சாலையில் 18 கி. மீ தொலைவில் ஐந்து ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே 2.5 கி.மீ தூரத்தில் அரசம்பாளையம் கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது. 

முதலில் கீழ்காணும் Google Map location பயன்படுத்தி வர வேண்டும். 

6 அடி சிவன் கோவில் ஸ்டாப்

பின்பு மேற்கே அரசம்பாளையம் கோவிலை விசாரித்து வரவும். 


மதுரை, திண்டுக்கல்லில் இருந்து வருபவர்கள் மலைக்கோவிலூர் அடுத்து (63 கிமீ) சீத்தப்பட்டி காலணி அடுத்து மேற்காக இடது பக்கமாக 2.5கிமீ பயணித்தால் அரசம்பாளையம் வந்தடையலாம். 

சித்தைப்பட்டி காலணி பிரிவு 


பின்பு மேற்கே அரசம்பாளையம் கோவிலை விசாரித்து வரவும். 



Ancient 6 Feet Shivalingam  Temple

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...