Sunday, May 7, 2023

வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மருதாடு எனும் கிராமத்தில் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் 25.03.2023 அன்று கரூர் தரகம்பட்டி சிவ நாயனார் மற்றும் அவரின் மனையியார் திருமதி செந்தமிழ்செல்வி, கரூர் சுப்பிரமணி , வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி சென்னை ஜீவா, மணி உள்ளிட்டோருடன் அடியேனும் பயணம் செய்தோம்.

ஊரின் ஒதுக்குப்புறமாக இவ்விடம் இருந்து வந்துள்ளது. பஞ்சமி நிலத்தின் வகையில் இது வருவதால் இவ்விடத்தில் ஊர்ப்பொதுமக்கள் கூடி கோவில் எழுப்புவதோ தொடர்ச்சியாக வழிபாடு செய்வதோ இயலாததாகிப் போய்விட்டது. இதன் கிழக்கே 200 அடி தூரத்தில் உள்ள  ஆலமரத்தின் அடியில் உள்ள முனீசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர். தற்போது மேல்மருவத்தூரில் இருந்து வந்நவாசி செல்ல 4 வழிச்சாலை அமைத்திடும் பணி துவங்கிடவே மருதாடு ஊருக்குள் சாலை செல்லாமல் ஊரின் ஒதுக்குப்புறமான இவ்விடத்தில் முனீசுவரர் கோவிலுக்கும் இந்த சிவலிங்கம் உள்ள வேப்பமரத்தின் இடையிலும் சென்றது. இந்தாள் வரை சிவலிங்கத்தை எடுக்க ஒப்புதல் வழங்காதவரின் நிலத்தில் சாலை அமைவதால் எடுத்து வைப்பதற்கான தடை நீங்கியது. இந்த நிலையில் நமது குழுவினருக்கு இத்தகவல் கிடைக்கவே விரைந்தோம். ஊர்முக்கிஸ்தர்களிடம் அனுமதியை சுப்பிரமணி ஐயா வாங்கியிருந்தார். ஊர்ப்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மருதாடு மருதீஸ்வரரை எடுத்து வைக்கத் தாயாரானோம். 

JCB வண்டியை வரவழைத்து சுற்றிலும் உள்ள முட்புதர்களையும் செடிகளையும் அகற்றினோம். சிவநாயனார் ஐயா, சுப்பிரமணி ஐயா, மருதாடு சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தேவராப்பதிகங்கள் பாடி எழுந்தருள் செய்ய விண்ணப்பம் வைத்தனர். இதன் பின் கடப்பாறை மற்றும் மண்வெட்டி கொண்டு தோண்ட ஆரம்பித்தனர். வேப்பமரத்தின் வேர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்ததால் JCB வண்டியைக் கொண்டு பறிக்கும் பணி ஆரம்பித்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தது இந்த சிவலிங்கம் . 

கூடுதல் விளக்கங்களை கீழ்க்காணும் யூடியுப் வீடியோவில் தெரிவித்துள்ளேன். 




 
கோவில் பொறுப்பாளர்கள்
ஆனைக்குட்டி - 9787128618
சங்கர் - 6381514652

Google Map Location 


நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 












































No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...