Sunday, May 7, 2023

கரூரில் தவ்வையுடன் சிவலிங்கம் கண்டுபிடிப்பு

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், சின்ன தாதம் பாளையம் கிராமத்தில் 13.11.2022 அன்று வாய்க்கால் கரையில் பல ஆண்டுகளாக முள்ளுக்குள் இருந்தும், நந்தியை சாராய பாட்டில்களின் மத்தியில் இருந்தும் மீட்டெடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஊர்மக்கள் சிவலிங்கத்தை எடுக்கவோ, வைக்கவோ முழு ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் காலை 11 மணிக்கு பேச்சு வார்த்தை ஆரம்பித்து மாலை 5 மணிக்கே எடுக்க அனுமதி கிடைத்தது.
 
8 ஆம் நூற்றாண்டு தவ்வை சிற்பத்துடன் கூடிய சிவலிங்கம், நந்திக்கு முதல் அபிசேகம் செய்து வழிப்பட்டை இறைவன் திருவருளால் துவங்கி வைத்தோம். 














ஒவ்வொரு நாளும் இந்த சிவலிங்கத்தை யும் நந்தியும் ஊர் மக்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள 16 கிராமங்களும் கொண்டாடியதுதான் வியப்பு. 



















தரையில் இருந்தவர், மண் மேட்டிற்கு வந்தார், ஓலைக் குடிசைக்கு வந்தார், இரும்பு ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு வந்தார், மின்விளக்கு உபயம், தரைதளம் உபயம், விளக்கு உபயம், ஆவுடை உபயம் என்று மிக மிக வளர்ந்தது.

 இன்று (01.01.2023 ஞாயிறு) 48 மண்டல பூஜையில் 1008 சங்காபிஷேகம் செய்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கி சின்ன தாதம்பாளையம் மக்கள் கொண்டாடினர். 




விரைவில் கற்கோவிலாகக் கட்ட திட்டமிட்டுள்ளனர். 

Ancient 5½Feet Sivalingam Annamalaiyar Temple

ஊர்ப்பொதுமக்களுக்கும், அடியார்பெரு மக்களுக்கும் நன்றிகள். 

நன்றி...

கோவில் பொறுப்பாளர் திரு. ரத்தினம் 9791888202

தொடர்ந்து பயணிப்போம்...
சிவாலயங்களை நோக்கி...

சிவசங்கர்
திண்டுக்கல்
9976913310 - WhatsApp

No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...