10.11.2024 அன்று நேரில் சென்று பார்த்தபோது தீத்தாம்பேட்.டை ஊரின் தெற்குப்பக்கத்தில் குளக்கரையில் இரண்டு சிவலிங்கங்கள் இருந்தது. வடக்குப்பக்கத்தில் இருந்த சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையுடன் தட்டைவடிவிலான லிங்க பானமும், தெற்குப்பக்கத்தில் கதைவடிவிலான லிங்கபானத்துடன் வட்டவடிவ ஆவுடையுடன் இருந்தது.
இரண்டு சிவலிங்கங்களையும் பீடங்களில் தனித்தனி நந்தியம்பெருமானுடன் பிரதிட்டை செய்ய திட்டமிடப்பட்டுளுக்கும் பீடம் கட்டும் பணி துவங்கியது. உடனுக்குடன் இரண்டு மற்றும் ஒன்றறை அடி அளவில் நந்திகள் வரவழைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் பீடங்களில் 4 திருமேனிகளும் பிரதிட்டை செய்யப்பட்டது. 20 x17 என்ற அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டது.
தமிழ்முறைப்படி வேள்வி செய்து திருமுறைகளில் கயிறு சாற்றி அருள்மிகு வீரட்டேஸ்வரர் - மங்கைநாயகியம்மை மற்றும் பிரம்மபுரீஸ்வரர் - திருநிலைநாயகி எனும் திருநாமம் இடப்பட்டு அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்ப்பொதுமக்களிடம் கோவில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புக்கு :
இளஞ்சேரன்
Google Map Location : https://maps.app.goo.gl/JHU2ygSPkbDG5NJm6
No comments:
Post a Comment