Thursday, November 28, 2024

திருச்செங்கோட்டில் சுயம்புலிங்கம்

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!
    

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பூவாழக்குட்டை கிராமத்தில்  வசித்து வரும் லோகநாதன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக முன்பாக அவர்களின் தோட்டத்தின் அருகேயுள்ள ஆற்றில் ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதாக கனவில் தோன்றியதாகவும் இதனை மெய்ப்பிப்பதாக அடுத்தடுத்த அமானுஸ்ய நிகழ்வுகள் நடந்த பின் சுயம்பு லிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வந்தனர். சுவாமியை  வெட்ட வெளியில் வைத்து வழிபாடு செய்து வந்தனர். தானாக அவ்விடத்தில் ஒரு வில்வ மரம் முளைத்துள்ளது. இந்நிலையில் வெட்ட வெளியல் சிவலிங்கம் இருப்பதாக ஒரு தகவல் கோவை அரன் பணி அறக்கட்டளைக்கு தெரிவித்தனர். 

    
       02.11.2024 அன்று நேரில் சென்று இடத்தை சுத்தம் செய்து மேற்கு திசையில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் பெருமானைப் பார்த்தவாறு பீடங்கள் அமைக்கப்பட்டது. உடனுக்குடன் மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. அங்கிருந்த சுயம்பு மூர்த்தி மெல்ல எடுக்கப்பட்டது. வழிபாட்டிற்கு ஏதுவாக பெரிதாக சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் பலிபீடத்துடன் வரவழைக்கப்பட்டது. தகடு, நவரத்தினங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு லிங்கபாணம் ஆவுடை மற்றும் நந்தியம்பெருமான் பிரதிட்டை செய்ய்பட்டது,  பிரதிட்டை செய்யும் நேரத்தில் சரியான மழைபெய்தது. தோண்டி எடுக்கப்பட்ட சுயம்பு மூர்த்தியை புதிதாக பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் முன் சிறிதளவு மேல் தெரியும்படி அமைக்கப்பட்டது. உள்ளுரில் உள்ள அன்பர் பெருமக்கள் பீடங்கள் அமைப்பது முதல் உடன் இருந்தனர். சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்ற்ப்பட்டது. மேற்கூரை 17க்கு 11 அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டது, இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. 

    03.11.2024 அன்று காலை 5 மணியளவில் தமிழ் முறைப்படி வேள்வி பூஜை துவங்கப்பட்டது. 3 மணிநேர பூஜைக்குப்பின் கலச நீர் ஊற்றப்பட்டு அபிசேக அலங்காரம் நடைபெற்றது, திருமுறைகளில் கயிறு சாற்றி  அருள்மிகு தோணியப்பர் எனும் திருநாமம் இடப்பட்டது. 

கோவில் பொருப்பாளர் : திரு. லோகநாதன் 


No comments:

Post a Comment

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...