திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கல்விக்குடி எனும் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக (2022) திரு. பாலமுருகன் என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் ஊரின் மேற்புரம் முன்னொரு காலத்தில் அக்ரஹாரம் இருந்ததாகவும், வாய்க்கால் கரையின் அருகே ஒரு சிவலிங்கம் அதனுடன் ஒரு அம்பாள் சிலை இருப்பதாக கூறினார். ஆனால் அவ்விடத்தில் உள்ள மிகப்பெரும் தூங்ககமூஞ்சி மரத்தின் கிளையில் பெரிய அளவிலான இரண்டு மலைத்தேன் கூடுகள் இருந்தது. அதானல் அவ்வப்போது மக்கள் வழிபட செல்லும் போது தேனீக்கள் கொட்டி தொந்தரவு செய்வதாக சொல்லி இருந்தார். பல மாதங்களாக தொடர்பு கொள்ளாத நிலையில் சமிபத்தில் தொடர்பு கொண்டு பேசினார். சிவலிங்கம் இருந்த நிலையில் அப்படியே மேற்கூரை அமைத்ததாகவும் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் பிரதிட்டை செய்து தர வேண்டியும் கேட்டிருந்தார்.
திருவருளால் 01.11.2024 அன்று கரூர் மாவட்டம் தரகம்பட்டியைச் சேர்ந்த சிவநாயனார் குடும்பத்தினருடன் அடியேனுடன் சென்று பார்த்தோம். அம்பாள் சிலை புதைந்த நிலையிலும், சுவாமி பல ஆண்டுகளாக வெட்ட வெளியல் இருந்து தற்போது தான் மேற்கூரை அமைத்துள்ளனர். தூங்க மூஞ்சி மரத்தின் மேல் இருந்த 2 மலைத்தேனி கூடுகளில் 1 மட்டுமே சற்று உயரத்தில் இருந்தது.

சிவலிங்கத்திருமேனியை பதிகங்கள் பாடி மீட்க முயற்சித்தோம். சுற்றிவர இருந்த சிமெண்ட் கலவைகளை அகற்றி பின் மேல் ஆவுடையை மேலே தூக்க முயற்சித்தோம். அப்போது தான் மிக நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது. சற்று சுதாரித்து கவனமாக உள்ளுர் அன்பர்களுடன் தூக்க மீண்டும் முயற்சித்தோம். மேல்ஆவுடைக்கும் கீழ் ஆவுடைக்குமான இடைவெளியில் ஒரு பாம்பு இருந்தது. மெல்ல வெளியே விரட்டி விட்டோம். அதன்பின்பு தான் மிகப்பெரும் கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்தது. கவனமாக பாம்பை வெளியேற்றிவிட்டு ஆவுடை மற்றும் லிங்க பாணத்தை பிரித்து எடுத்தோம்.
பீடங்கள் கட்டும் பணி நடைபெறும் போதே கனமழை பெய்தது. மழை சற்று குறைந்ததும் பீடங்கள் கட்டும் பணி தொடர்ந்தது. பெரம்பலுரில் இருந்து மாலை 3 மணிக்கு நந்தி. பலிபீடம் ஆதார பீடத்துடன் வரவழைக்கப்பட்டது. திருப்பணி செய்யுமிடம் தார்ச்சாலையில் இருந்து 500 மீ தொலைவில் இருந்தது. மழையின் காரணமாக செல்லுமிடம் சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளுர் இனளஞர்கள் உதவியுடன் நந்தி பலிபீடம் மற்றும் ஆதார பீடம் கடும் சிரமங்களுக்கு இடையே எடுத்து செல்லப்பட்டது.
சிலலிங்கம், நந்தி மற்றும் அம்பாள் பீடங்களில் திருமேனிகள் மாலை 5 மணியளவில் பிரதிட்டை செய்யப்பட்டது. மலைத்தேனீக்கள் எந்தநேரம் வேண்டுமானாலும் கலைந்துவிடும் என்பதால் ஒலி பெருக்கி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் தமிழ் முறைப்படி வேள்வி செய்ய்பெற்று அபிடேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருமுறைகளில் கயிறு சாற்றப்பட்டு அருள்மிகு. அமிர்தலிங்கேஸ்வரர் உடனாகிய போதநாயகி எனும் திருநாமம் இடப்பட்டது.
தொடர்புக்கு : திரு. பாலமுருகன் 8489869367
Google Map Location : https://maps.app.goo.gl/3Uc6fJFL94EsLqT56
சிவாய நம
சிவசங்கர்
திண்டுக்கல்
9976913310
No comments:
Post a Comment