திருஅஞ்சைக்களம் மகாதேவர் கோவில் (Sri Vanjikulam Mahadevar)
இறைவர் திருப்பெயர்: அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்: உமையம்மை.
தல மரம்: சரக்கொன்றை
தீர்த்தம் : சிவகங்கை.
வழிபட்டோர்: சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர்
தல வரலாறு
பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்.
இங்குள்ள நடராசர், சேரமான் பெருமான் பூசித்தது.
வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடை "யானை வந்த மேடை" என்று வழங்கப்படுகிறது.
கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து இத்தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றது வரலாறு.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - தலைக்குத் தலைமாலை.
சிறப்புகள்
இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும்.
அவதாரத் தலம் : கொடுங்கோளூர் - திருவஞ்சைக்களம் (கொடுங்கலூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : திருவஞ்சைக்களம் கொடுங்கலூர்.
குருபூசை நாள் : ஆடி - சுவாதி.
கேரள பாணியில் அமைந்த கோயில்.
துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.
கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.
அஞ்சைக்களத்தபர் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார்.
இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது
கிழக்கு ராஜகோபுர நுழைவாய் பக்கக்கற்சுவரில், யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்கள் செப்புத் திருமேனிகளாக உள்ளன.
சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.
இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை.
அமைவிடம் மாநிலம் : கேரளா சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் 'இரிஞாலக்குடா' நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொடர்பு : 0487-2331124
தொடர்புக்கு: 8754422764
No comments:
Post a Comment