Wednesday, April 29, 2026

கோரக்கர் வழிபட்ட சிவலிங்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம். மங்கலம்பேட்டை கிராமத்தில்  முன்னொரு காலத்தில் ஒரு சிவலிங்கம் அவ்விடத்தில் வழிபாட்டில் இருந்துள்ளது. கோரக்கர் வழிபட்டதாக சொல்லப்படும் அந்த மூர்த்தியை அவ்வூர் மக்கள் பௌர்ணமி தோறும் வழிபட்டு வந்துள்ளனர். ஆலயமாக எழுப்ப எண்ணி ஒரு சிவலிங்கமும், நந்தி மற்றும் பலிபீடம் செய்து வந்துள்ளனர் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த திருமேனிகளை திருப்பணி செய்ய இயலாமல் அப்படியே வெட்ட வெளியில் வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.



கோவை அரன் பணி அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்ய முன்வந்தது.

அரன் பணியின் அடியார் திரு. மணி அவர்களை முன்னதாக அனுப்பி இடத்தை சுத்தம் செய்து பீடங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது 

கள்ளக்குறிச்சி திரு. வசந்த் ஐயா அவர்கள் அரன் பணி அமைக்கும் மேற்கூரையுடன் சுற்றி அடைக்கும் பணியை செய்து தருவதாக முன்வந்தார். 

18.04.2026 அன்று மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீடங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.  19.03.2026 அன்று சிவநாயனார் அவர்களால் தமிழ் முறைப்படி வேள்வி பூசை வழிபாடு நடைபெற்றது. 







































சுந்தரருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான்

 சிவாய நம


நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்பனையூர் கிராமத்தில் ஊரின் வடகிழக்கே இடுகாட்டிற்குச் செல்லும் வழியில் மண்சாலை ஓரத்தில் ஒரு சிவலிங்கம் பல ஆண்டுகளாகவே புதைந்திருந்தது. பல ஆண்டுகளாகவே மழையிலும் வெயிலிலும் இருந்ததால் சேதமடைந்திருந்து தூர்ந்திருந்த நிலையில் இருந்தது. வட்டவடிவான ஆவுடையின் கோமுகம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.சுற்றிலும் விவசாய நிலமாக இருந்தாலும் இந்த சிவலிங்கம் இருக்கும் இடத்தைச்சுற்றி சுமார் 3 ஏக்கர் அளவுக்கு திடலாகவே இருந்தது. மண்பாதைக்கு கிழக்கே ஒரு சிறிய குட்டை இருந்தது. இடுகாட்டிற்கு செல்லும் சாலையாக இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் இப்பகுதிக்கு வருவதில்லை. சிவலிங்கம் இவ்வாறு உள்ளது, மீட்கவேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் தோன்றவில்லை போலும். இத்திருப்பனையூரின் மையத்திலுள்ள தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை 73 ஆவது கோவில் எனும் சிறப்பு பெற்ற அருள்தரும் பெரியநாயகி உடனாகிய அருள்தரும் சௌந்தரேசுவரர் பெருமான் சிவன் கோவில் கல்வெட்டுடன் உள்ளது. 

https://drive.google.com/file/d/1Zvfa_XtLSCEW5MmkFOujaU-UW7OscxoJ/view?usp=drive_link

திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் நேரில் வந்து திருப்பனையூர் சிவனைப் பாடியுள்ளனர். பொியபுராணக்குறிப்புகளின்படி திருப்புகழுர் பெருமானிடம் சுந்தரர். திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து' என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருட எதிர் சென்று தொழுது வீழ்ந்து வணங்கி, 'அரங்காடலர் அழகியர் என்று பதிகம் பாடி, அருள் பெற்றார் இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் சந்தித்த தீர்த்தம்' என்றும் பெயருடன் நிகழ்கிறது.



இக்குறிப்புகள் மிகச்சரியாக குறிப்பிடப்படும் பகுதி இடுகாட்டிற்கு செல்லும் பகுதியே என்பதை கணக்கில் கொள்ளலாம். கோவை அரன் பணி அறக்கட்டளை சார்பில் திருப்பனையூர் சிவன்கோவில் முழுதும் திருப்பணி நடைபெற்று வரும் வேளையில் 06.04.2026 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவ்வூரைச்சேர்ந்த பரமேஸ்வரி என்பார் இது பற்றிய தகவலைத் தெரிவித்தார். இதன்படி 14.03.2026 சனிக்கிழமை அன்று நேரில் செல்லப்பட்டது. உடனடியாக 17*11 அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டது. சுவாமி மற்றும் நந்திக்கு பீடங்கள் கட்டப்பட்டது. ஊர்ப்பெரியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அந்த திடல் சுத்தம் செய்யப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் திடலை சமப்படுத்தும் போது கோவில் கட்டுமானங்கள் தெரிந்தது. இந்த இடத்தில் முன்னொரு காலத்தில் சிவாலயம் இருந்தது உறுதியானது.


சிவலிங்கத்தைச் சுற்றிலும் பறித்தபின் சிவலிங்கம் மெல்ல வெளியே தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமடிக்கவே மெய்சிலிர்ப்பாகி விட்டது. 3 அடி அளவில் சிவலிங்க பானம் இருந்தது. 11 இன்ச் உயரத்தில் 22 இன்ச் சுற்றளவுடன் கோமுகம் உடைந்த நிலையில் இருந்தது. புதிதாக ஆவுடை மற்றும் 1.5 அளவு நந்தி மற்றும் பலிபீடம் செய்து வரப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட லிங்கபானம்  கழுவி சுத்தம் செய்யப்பட்டது,  பின்பு பீடங்களில் எந்திரங்கள் வைத்து பிரதிட்டை செய்யப்பட்டது அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.  

தமிழ் முறைப்படி வேள்வியை சிவநாயனார் தம்பதியினர் செய்து முடித்தனர். நள்ளிரவு 12 மணி ஆனபின்பும் ஊர்மக்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். 

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த இடமாதலால்  "காட்சி கொடுத்த நாதர்" எனும் திருநாமம் சூட்டப்பட்டது. 



















கோரக்கர் வழிபட்ட சிவலிங்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம். மங்கலம்பேட்டை கிராமத்தில்  முன்னொரு காலத்தில் ஒரு சிவலிங்கம் அவ்விடத்தில் வழிபாட்டில் இருந்துள்ளது. கோ...