Thursday, November 28, 2024

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!


        நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங்களுக்கு இடையே வித்தியாசமான அமைப்பில் இரண்டு சிவலிங்கங்கள் இருப்பதாக கோவை அரன் பணி அறக்கட்டளைக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சிவனடியார்கள் சுகாசினி, இளஞ்சேரன் ஆகியோர் தகவல் கொடுத்தனர். 

        10.11.2024 அன்று நேரில் சென்று பார்த்தபோது தீத்தாம்பேட்.டை ஊரின் தெற்குப்பக்கத்தில் குளக்கரையில் இரண்டு சிவலிங்கங்கள் இருந்தது. வடக்குப்பக்கத்தில் இருந்த சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையுடன் தட்டைவடிவிலான லிங்க பானமும், தெற்குப்பக்கத்தில் கதைவடிவிலான லிங்கபானத்துடன் வட்டவடிவ ஆவுடையுடன் இருந்தது. 
   

    இரண்டு சிவலிங்கங்களையும் பீடங்களில் தனித்தனி நந்தியம்பெருமானுடன் பிரதிட்டை செய்ய திட்டமிடப்பட்டுளுக்கும் பீடம் கட்டும் பணி துவங்கியது. உடனுக்குடன் இரண்டு மற்றும் ஒன்றறை அடி அளவில் நந்திகள் வரவழைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் பீடங்களில் 4 திருமேனிகளும் பிரதிட்டை செய்யப்பட்டது. 20 x17  என்ற அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டது. 


                தமிழ்முறைப்படி வேள்வி செய்து திருமுறைகளில் கயிறு சாற்றி அருள்மிகு வீரட்டேஸ்வரர் - மங்கைநாயகியம்மை மற்றும் பிரம்மபுரீஸ்வரர் - திருநிலைநாயகி எனும் திருநாமம் இடப்பட்டு அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்ப்பொதுமக்களிடம் கோவில் ஒப்படைக்கப்பட்டது. 


தொடர்புக்கு :  

இளஞ்சேரன் 


Google Map Location : https://maps.app.goo.gl/JHU2ygSPkbDG5NJm6


        


திருச்செங்கோட்டில் சுயம்புலிங்கம்

சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!
    

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பூவாழக்குட்டை கிராமத்தில்  வசித்து வரும் லோகநாதன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக முன்பாக அவர்களின் தோட்டத்தின் அருகேயுள்ள ஆற்றில் ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதாக கனவில் தோன்றியதாகவும் இதனை மெய்ப்பிப்பதாக அடுத்தடுத்த அமானுஸ்ய நிகழ்வுகள் நடந்த பின் சுயம்பு லிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வந்தனர். சுவாமியை  வெட்ட வெளியில் வைத்து வழிபாடு செய்து வந்தனர். தானாக அவ்விடத்தில் ஒரு வில்வ மரம் முளைத்துள்ளது. இந்நிலையில் வெட்ட வெளியல் சிவலிங்கம் இருப்பதாக ஒரு தகவல் கோவை அரன் பணி அறக்கட்டளைக்கு தெரிவித்தனர். 

    
       02.11.2024 அன்று நேரில் சென்று இடத்தை சுத்தம் செய்து மேற்கு திசையில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் பெருமானைப் பார்த்தவாறு பீடங்கள் அமைக்கப்பட்டது. உடனுக்குடன் மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. அங்கிருந்த சுயம்பு மூர்த்தி மெல்ல எடுக்கப்பட்டது. வழிபாட்டிற்கு ஏதுவாக பெரிதாக சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் பலிபீடத்துடன் வரவழைக்கப்பட்டது. தகடு, நவரத்தினங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு லிங்கபாணம் ஆவுடை மற்றும் நந்தியம்பெருமான் பிரதிட்டை செய்ய்பட்டது,  பிரதிட்டை செய்யும் நேரத்தில் சரியான மழைபெய்தது. தோண்டி எடுக்கப்பட்ட சுயம்பு மூர்த்தியை புதிதாக பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் முன் சிறிதளவு மேல் தெரியும்படி அமைக்கப்பட்டது. உள்ளுரில் உள்ள அன்பர் பெருமக்கள் பீடங்கள் அமைப்பது முதல் உடன் இருந்தனர். சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்ற்ப்பட்டது. மேற்கூரை 17க்கு 11 அளவில் மேற்கூரை அமைக்கப்பட்டது, இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. 

    03.11.2024 அன்று காலை 5 மணியளவில் தமிழ் முறைப்படி வேள்வி பூஜை துவங்கப்பட்டது. 3 மணிநேர பூஜைக்குப்பின் கலச நீர் ஊற்றப்பட்டு அபிசேக அலங்காரம் நடைபெற்றது, திருமுறைகளில் கயிறு சாற்றி  அருள்மிகு தோணியப்பர் எனும் திருநாமம் இடப்பட்டது. 

கோவில் பொருப்பாளர் : திரு. லோகநாதன் 


Wednesday, November 27, 2024

ரெட்டைப்பாம்புகளும் சிவலிங்கமும்

சிவாய நம! திருச்சிற்றம்பலம்

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கல்விக்குடி எனும் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக (2022) திரு. பாலமுருகன் என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் ஊரின் மேற்புரம் முன்னொரு காலத்தில்  அக்ரஹாரம் இருந்ததாகவும், வாய்க்கால் கரையின் அருகே ஒரு சிவலிங்கம் அதனுடன் ஒரு அம்பாள் சிலை இருப்பதாக கூறினார். ஆனால் அவ்விடத்தில் உள்ள மிகப்பெரும் தூங்ககமூஞ்சி மரத்தின் கிளையில் பெரிய அளவிலான இரண்டு மலைத்தேன் கூடுகள் இருந்தது. அதானல் அவ்வப்போது மக்கள் வழிபட செல்லும் போது தேனீக்கள் கொட்டி தொந்தரவு செய்வதாக சொல்லி இருந்தார். பல மாதங்களாக தொடர்பு கொள்ளாத நிலையில் சமிபத்தில் தொடர்பு கொண்டு பேசினார். சிவலிங்கம் இருந்த நிலையில் அப்படியே மேற்கூரை அமைத்ததாகவும் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் பிரதிட்டை செய்து தர வேண்டியும் கேட்டிருந்தார். 




    திருவருளால் 01.11.2024 அன்று கரூர் மாவட்டம் தரகம்பட்டியைச் சேர்ந்த சிவநாயனார் குடும்பத்தினருடன் அடியேனுடன் சென்று பார்த்தோம். அம்பாள் சிலை புதைந்த நிலையிலும், சுவாமி பல ஆண்டுகளாக வெட்ட வெளியல் இருந்து தற்போது தான் மேற்கூரை அமைத்துள்ளனர். தூங்க மூஞ்சி மரத்தின் மேல் இருந்த 2 மலைத்தேனி கூடுகளில் 1 மட்டுமே சற்று உயரத்தில் இருந்தது. 











    சிவலிங்கத்திருமேனியை பதிகங்கள் பாடி மீட்க முயற்சித்தோம். சுற்றிவர இருந்த சிமெண்ட் கலவைகளை அகற்றி பின் மேல் ஆவுடையை மேலே தூக்க முயற்சித்தோம். அப்போது தான் மிக நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது. சற்று சுதாரித்து கவனமாக உள்ளுர் அன்பர்களுடன் தூக்க மீண்டும் முயற்சித்தோம். மேல்ஆவுடைக்கும் கீழ் ஆவுடைக்குமான இடைவெளியில் ஒரு பாம்பு இருந்தது. மெல்ல வெளியே விரட்டி விட்டோம். அதன்பின்பு தான் மிகப்பெரும் கட்டுவிரியன் பாம்பு உள்ளே இருந்தது. கவனமாக பாம்பை வெளியேற்றிவிட்டு ஆவுடை மற்றும் லிங்க பாணத்தை பிரித்து எடுத்தோம்.



    பீடங்கள் கட்டும் பணி நடைபெறும் போதே கனமழை பெய்தது. மழை சற்று குறைந்ததும் பீடங்கள் கட்டும் பணி தொடர்ந்தது. பெரம்பலுரில் இருந்து மாலை 3 மணிக்கு  நந்தி. பலிபீடம் ஆதார பீடத்துடன் வரவழைக்கப்பட்டது. திருப்பணி செய்யுமிடம் தார்ச்சாலையில் இருந்து 500 மீ தொலைவில் இருந்தது.  மழையின் காரணமாக செல்லுமிடம் சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளுர் இனளஞர்கள் உதவியுடன் நந்தி பலிபீடம் மற்றும் ஆதார பீடம்  கடும் சிரமங்களுக்கு இடையே எடுத்து செல்லப்பட்டது. 




    சிலலிங்கம், நந்தி மற்றும் அம்பாள் பீடங்களில் திருமேனிகள் மாலை 5 மணியளவில் பிரதிட்டை செய்யப்பட்டது. மலைத்தேனீக்கள் எந்தநேரம் வேண்டுமானாலும் கலைந்துவிடும் என்பதால் ஒலி பெருக்கி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் தமிழ் முறைப்படி வேள்வி செய்ய்பெற்று அபிடேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

    











திருமுறைகளில் கயிறு சாற்றப்பட்டு அருள்மிகு. அமிர்தலிங்கேஸ்வரர் உடனாகிய போதநாயகி எனும் திருநாமம் இடப்பட்டது. 

தொடர்புக்கு : திரு. பாலமுருகன் 8489869367

Google Map Location : https://maps.app.goo.gl/3Uc6fJFL94EsLqT56

சிவாய நம

சிவசங்கர்

திண்டுக்கல்

9976913310


  

Sunday, June 9, 2024

பண்ருட்டி வேப்ப மரத்தின் அடியில் சிவலிங்கம்

சிவாய நம!! திருச்சிற்றம்பலம் !!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் செம்மேடு எனும் கிராமத்தின் ஊருக்கு மேற்கே 250 மீட்டர் தொலைவில் கெடிலம் நதி கிளைஆற்றினை அடுத்து 4 அடி  அளவுள்ள ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் பல ஆண்டுகளாக வெட்ட வெளியில் இருந்து வந்தது.


இந்நிலையில் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் சிவலிங்கத் திருமேனி ஜேசிபி கொண்டு மீட்கப்பட்டு ஊர் பொதுமக்களுடன் இணைந்து நந்தி மற்றும் பலிபீடம் பீடங்களில் பிரதிட்டை செய்யப்பட்டது. 

திருமுறைகளில் கயிறு சாற்றி அரும்பன்ன வனமுலையம்மை உடனாகிய சொன்னவாறு அறிவார் என திருநாமம் இட்டு சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களிடம் வழிபாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. 

Friday, September 29, 2023

பருத்திக் காட்டுக்குள் பல்லவர்கள் கால 32 பட்டை சிவலிங்கம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டம், அபிவிருத்தி ஈஸ்வரம் அருகே திடல் எனும் கிராமத்தில் பருத்திக்காட்டிற்குள் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த 32 பட்டைகளை உடைய சிவலிங்கம் வழிபாடு இன்றி மண்ணில் புதையுண்டு இருந்தது.  இது பற்றிய விவரம் முகநூலில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சிவ முத்துராமன் அவர்கள் பகிர்ந்திருந்தார். தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் மேற்கூரையுடன் திருப்பணி செய்து தருவதாகக் கூறினோம்.

சிவலிங்கத்தின் ஆவுடை சேதமடைந்து இருப்பதால் பழைய ஆவுடையின் அமைப்பைப் போலவே 2½ அடி சுற்றளவில் ஆவுடையும்,  2 அடி உயர நந்தி மற்றும் பலிபீடம் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் தயார் செய்யப்பட்டது.  27.9. 2023 பவுர்ணமி திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்யப்பட்டு, 20x11 என்ற அளவில் மேற்கூரை அமைத்து தரப்பட்டது. 


அதிசயமான 32 பட்டை வடிவ சிவலிங்கம்

சிவலிங்கங்கள் பொதுவாக 2 பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். நேராக நிற்கக்கூடிய லிங்க பானம் மற்றும் அபிஷேக நீர் வெளியேறும் அமைப்புடைய ஆவுடை.

 இதில் லிங்க பானம் என்பது முழு நீளத்தை 3 ஆக பிரித்து அமைக்கும் வழக்கம் (30:30:40 & 30:35:35 & 25:35:40) உள்ளது.கீழிருந்து மேலே  
🕉️  முதல் பாகம் -பிரம்மம் (4 பட்டை)
🕉️ இரண்டாம் பாகம் - விஷ்ணு (6/8 பட்டை)
🕉️மூன்றாம் பாகம் - ருத்ரம் (உருளை வடிவில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன்) அமையப் பெற்றிருக்கும். இவற்றில் விதி பிரம்ம பாகம் என்பது பிரதிட்டை செய்யும் தரைப்பகுதியில் இருந்து கீழும், விஷ்ணு பாகத்தில் ஆவுடை பொருந்தியும், ருத்ர பாகம் மட்டும் நம் கண்களுக்கு தெரியும் பகுதியாகும்.

ஆவுடை - சதுரமாகவோ, சதுரத்திற்குள் வட்டமாகவோ, வட்ட வடிவிலோ (விரிந்த) மேல் பாதி, கீழ் பாதியாகவோ (குவிந்த) இருக்கலாம் அல்லது ஒரே கல்லில் செய்யப்பட்டும் இருக்கும். 

இவற்றில் எல்லாம் சற்று மாறுபட்டு பட்டைகளை உடைய சிவலிங்கம் தாரா லிங்கம் என்றழைக்கப்படுகிறது.

🕉️4 பட்டை - வேதலிங்கம்
🕉️8 பட்டை - அஷ்ட தாரா லிங்கம்
🕉️16 பட்டை - சோடஷ லிங்கம்
🕉️32 பட்டை - தர்மதாரா லிங்கம்
🕉️64 பட்டை - சிவ லீலா சமர்த்த லிங்கம் ஆகும். 

பட்டை வடிவிலான சிவலிங்கங்கள் 8- 9 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களால் எடுக்கப்பட்ட ஆலயங்களில் காணமுடிகிறது. 

32 தர்மங்களையும் செய்த புண்ணியங்களைத் தரவல்லது என்பதால் "தர்மதார லிங்கம்" எனும் சிறப்பு பெறுகிறது. 

Sunday, May 7, 2023

முந்திரிக் காட்டிற்குள் ஒரு சிவலிங்கம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாவனம் எனும் கிராமத்தின் முந்திரிக்காட்டில் ஒரு சிவலிங்கம் ஆவுடையின் கீழ்ப்பாகத்துடனும், சண்டிகேஸ்வரருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நமது குழுவினருடன் 29.04.2023 அன்று நேரில் சென்றோம்.

விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்கை அடுத்த வலப்பக்க பிரிவின் வழியே சென்றால் சிலையுர் அடுத்து வாவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் முக்கிய பிரதான விவசாயம் முந்திரி சாகுபடி மட்டுமே. ஏதேனும் பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் 5 கிமி தொலைவில் உள்ள ஆண்டிமடம் தான் செல்லவேண்டும். இவ்வூரில் கவிதா என்பவரின் முந்திரித் தோட்டத்தில் 5தலைமுறையாக ஒரு சிவலிங்கமும், சண்டிகேஸ்வரர் புதைந்த நிலையிலும் இருந்துள்ளது. அவ்வப்போது மட்டுமே வழிபாடு செய்து வந்துள்ள்னர். கற்சிலைகள் வெயிலில் உள்ளதைப் பார்த்து சில மாதங்களுக்கு முன் மேற்கூரை அமைத்துள்ளனர். 

இவ்வூரின் அருகே கருக்கூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வனத்தறை அதிகாரி திரு.கலியமூர்த்தி அவர்கள் பிரதோசம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் வழிபாடு செய்து வந்துள்ளார். 

திருப்பணி செய்து தர வேண்டி வெங்கடேசன் என்ற அடியார் மூலம் தகவல் கிடைத்ததும் நேரில் சென்று பணியைத் துவங்கினோம். 

3 அடி உயரத்தில் இருந்த லிங்கபாணத்திற்கு பீடமும், ஆவுடை போன்ற அமைப்பை செங்கல் மூலமும் இரவு 12 மணிக்கு கட்டி முடித்தோம். 

அன்றாடம் வழிபாடு நடைபெறாவிட்டாலும் அவ்வப்போது பிரதோச வழிபாடாகிலும் நடைபெற வேண்டும் என எண்ணி நமது கோவை அரன் பணி அறக்கட்டளையின் திருமதி சந்திரா அவர்களைத் தொடர்பு கொண்டு உடனே ஒன்னேமுக்கால் அடியில் ஒரு நந்தியம்பெருமான தேவை என்றதும் திரு. கணேசன் ஐயா அவர்கள் மூலம் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு காலை 8 மணிக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு துவங்கியது.


வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மருதாடு எனும் கிராமத்தில் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் 25.03.2023 அன்று கரூர் தரகம்பட்டி சிவ நாயனார் மற்றும் அவரின் மனையியார் திருமதி செந்தமிழ்செல்வி, கரூர் சுப்பிரமணி , வந்தவாசியைச் சேர்ந்த சுப்பிரமணி சென்னை ஜீவா, மணி உள்ளிட்டோருடன் அடியேனும் பயணம் செய்தோம்.

ஊரின் ஒதுக்குப்புறமாக இவ்விடம் இருந்து வந்துள்ளது. பஞ்சமி நிலத்தின் வகையில் இது வருவதால் இவ்விடத்தில் ஊர்ப்பொதுமக்கள் கூடி கோவில் எழுப்புவதோ தொடர்ச்சியாக வழிபாடு செய்வதோ இயலாததாகிப் போய்விட்டது. இதன் கிழக்கே 200 அடி தூரத்தில் உள்ள  ஆலமரத்தின் அடியில் உள்ள முனீசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர். தற்போது மேல்மருவத்தூரில் இருந்து வந்நவாசி செல்ல 4 வழிச்சாலை அமைத்திடும் பணி துவங்கிடவே மருதாடு ஊருக்குள் சாலை செல்லாமல் ஊரின் ஒதுக்குப்புறமான இவ்விடத்தில் முனீசுவரர் கோவிலுக்கும் இந்த சிவலிங்கம் உள்ள வேப்பமரத்தின் இடையிலும் சென்றது. இந்தாள் வரை சிவலிங்கத்தை எடுக்க ஒப்புதல் வழங்காதவரின் நிலத்தில் சாலை அமைவதால் எடுத்து வைப்பதற்கான தடை நீங்கியது. இந்த நிலையில் நமது குழுவினருக்கு இத்தகவல் கிடைக்கவே விரைந்தோம். ஊர்முக்கிஸ்தர்களிடம் அனுமதியை சுப்பிரமணி ஐயா வாங்கியிருந்தார். ஊர்ப்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மருதாடு மருதீஸ்வரரை எடுத்து வைக்கத் தாயாரானோம். 

JCB வண்டியை வரவழைத்து சுற்றிலும் உள்ள முட்புதர்களையும் செடிகளையும் அகற்றினோம். சிவநாயனார் ஐயா, சுப்பிரமணி ஐயா, மருதாடு சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தேவராப்பதிகங்கள் பாடி எழுந்தருள் செய்ய விண்ணப்பம் வைத்தனர். இதன் பின் கடப்பாறை மற்றும் மண்வெட்டி கொண்டு தோண்ட ஆரம்பித்தனர். வேப்பமரத்தின் வேர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்ததால் JCB வண்டியைக் கொண்டு பறிக்கும் பணி ஆரம்பித்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தது இந்த சிவலிங்கம் . 

கூடுதல் விளக்கங்களை கீழ்க்காணும் யூடியுப் வீடியோவில் தெரிவித்துள்ளேன். 




 
கோவில் பொறுப்பாளர்கள்
ஆனைக்குட்டி - 9787128618
சங்கர் - 6381514652

Google Map Location 


நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 












































சிவாய நம! திருச்சிற்றம்பலம்!!         நாகபட்டினம் மாவட்டம்,  கீழ்வேளுர் வட்டம், ஆவியூர் ஊராட்சி, தீத்தாம்பேட்டை கிராமத்தின் குளக்கரை முள்மரங...